உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கஞ்சா

கஞ்சா

அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-34 04-07-2024 கஞ்சா உதிரம் ஓடும் நரம்பெல்லாம் கஞ்சா உந்தன் கலப்பல்லோ கஞ்சாவின் போதை வகுப்பதெல்லாம் கண்முன்னே சாவின் பாதையல்லோ விஞ்ஞானி கொஞ்சம் மருத்துவ குணம் வியந்து காண கஞ்சாவில் எம்ஞானி நலிந்து நொடிந்த உடலும் எலும்புத்தசையும் எஞ்சினது போதையில் பெற்றவரை மறந்து பேதைமனம் கொண்டு பெரும் அவலமிங்கு கஞ்சாவால் மற்றவரை நினைந்து மானத்தை எண்ணி மரியாதை போச்சு கஞ்சாவால் மூளை பாதிப்பு, வனப்பு மிகுந்த முகம் முற்றும் ஞாபகமின்னை, மறதி கஞ்சாவால் மனதிலேதோ துக்கம், ஏக்கம் மாற்ற வழி உனக்குள் உண்டு, அஞ்சாமல் கஞ்சாவால் வாழ்வை கெடுத்து விடாதே காலங்கள் கரைந்தால் மீளாதிங்கு அஞ்சாமல் விடியலைத் தொடங்கிடு நீ ஆனந்தமாய் வெளியில் சுற்றித் திரிந்திடு. நன்றி வணக்கம் ஜெபா ஸ்ரீதெய்வீகன்.