உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

……கஞ்சா

……கஞ்சா

……..கஞ்சா ——————— தலைக் கஞ்சா தலைவனும், தானைக் கஞ்சா சிப்பாயும், நிலைக் கஞ்சா நிலத்தோனும், நிம்மதி என்றும் இழப்பதில்லை! மணாளனுக் கஞ்சா மனைவியும், மனைவிக் கஞ்சா மணாளனும், குணவானுக் கஞ்சா கொடூரனும், கூடிடில், கோணுமே நிம்மதி! பெற்றோர்க் கஞ்சா பிள்ளையும், பெரியோர்க் கஞ்சா சிறியோனும், கற்றோர்க் கஞ்சா காடையனும், காசினியில் நஞ்சென வருமே! அஞ்சுதற் கஞ்சா அறிவிலியும், ஆண்டவனுக் கஞ்சா அடியவனும், வெஞ்சமர்க் கஞ்சா வெறியோனும், வீழ்வதே பாரதன் விழுமியமாம்! ஊருக் கஞ்சா உடையோரும், உணர்வுக் கஞ்சா உன்மத்தரும், போருக் கஞ்சா படையோரும், பொருதிடில், பூமியே துவளும்! நன்றி “மதிமகன்”