உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஔவை

ஔவை

பெளர்ணமி இரவில்.... ===================== வெட்ட வெளியிலொரு வட்ட முழுநிலவு வானமதில் கதைபலதை உரைக்கும் -அது வாழ்வுதனில் கனவுகளை நிறைக்கும் கொட்டும் பனியிரவில் பட்டு உடல்நடுங்க காதலது கண்சிமிட்டி அழைக்கும் - மனம் காட்சிகளைக் கவியெழுத நினைக்கும். சிட்டுக் குயிலிரண்டு தொட்டுக் குலவிடவும் சோலைமரம் தன்நிலையை மறக்கும் -அதில் சேதிபல உள்மனதில் இருக்கும் நட்ட நடுநிசியில் இட்ட கவி வரிகள் நாளையதில் இனியவைகள் சேர்க்கும் -அது நானிலத்தில் விடிவுகளை நோக்கும். ஒளவை.