உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஔவை

ஔவை

கற்றவர் இயல்பு =============== அற்புத வாய்ப்பை அனைவர்க்கும் காட்டுவர் வெற்றிப் பொழுதிலும் வேறாகார் - கற்றவரே நற்றுணை போலே நலமுடன் வாழ்ந்திடப் பெற்றுத் தருவரே பேறு. பெற்றவர் போற்றிப் பெருமையும் கொள்ளவே உற்றவர் என்றும் உவகையுறக் -கற்றவரே நற்சான்று பெற்றிடுவர் நாளும் உலகிலே வெற்றியே கிட்டிடும் வாழ்வு. சிற்றின்ப வாழ்வில் சிறப்புடன் ஓங்கிட வற்றாத இன்பம் வளம்சேர்க்கும் -கற்றவரே குற்றம் களைந்து குடும்பம் நடத்துவர் நற்பண்பில் ஓங்குமே நாடு. வற்றாத ஊற்றாய் வளம்தரும் நீராக நற்செயல் செய்திட நாடுவர் - கற்றவரே வெற்றியை நோக்கியே வென்றிட வைத்திடப் பற்றி இழுப்பரே பார். ஔவை.