உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஒளிமயமான எதிர்காலம் துலங்கட்டும்

ஒளிமயமான எதிர்காலம் துலங்கட்டும்

ஒளிமயமான எதிர்காலம் துலங்கட்டும் ஒளிமயமான எதிர்காலம் ஒளிர்ந்துமே துலங்கிடவும் வழியது மேவிட வார்த்தையும் இலங்கிட கனிந்திடும் இன்பம் கவலைகளைப் போக்கவும் விளித்து விளம்பிட விண்கூவி நின்றிட இனித்த பிறவி எடுத்தபயன் அறிந்திட கனிந்தநல் மனதில் கருணையும் கூடிட பனித்துளி போன்றே எம்பாவும் தெளித்திட திணித்திடும் திகழமுதம் தித்திப்பாய் இனித்திட அவைக்கு ஓர்விருந்து அமுதமாய் பொழிந்திட சுவைக்கு நல்மருந்தாய் தூய்மையும் அடைந்திட நகைச்சுவை கொடுத்து மகிழ்விக்க வேண்டும் அகமதிலென்றும் அறத்தின் வழியே ஏகுவோம் இகமதில் ஒளிமயமான எதிர்காலம் துலங்கட்டும் சிவருபன் சர்வேஸ்வரி