உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஒத்திகை

ஒத்திகை

ஜெயம் தங்கராஜா முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை கை எத்தனைமுறை நிகழ்த்தினாலும் சரிபார்க்கும் பயிற்சி ஒத்திகை உதவாதே தள்ளிப்போவதுண்டு முயற்சி நல்லாத்தான் இருக்கும் தனித்தே செய்திடும்போது எல்லோருக்கும் மத்தியிலே நல்லாகப் படுத்திடும்பாடு தேர்வினிலும் இதுபோன்று அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு நேர்முகமென வரும்போது வெடிக்காது குண்டு அதை மாதிரி செய்து பார்ப்பது அதையே மீண்டும் செய்வதற்கு வேர்ப்பது பலர் மேம்படுத்திகொள்வார் தங்களை இதனூடு சிலர் என்போன்று நல்முறையின்றி பெரும்பாடு ஜெயம் 12.06.2024