உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

-எல்லாளன் வாரம்162

-எல்லாளன் வாரம்162

நிழல் தேடும் தமிழன் ஆதரவு பறவைகட்கு கூடு அதிலுறங்கும் ஆணோடு பேடு சீதளத்தில் காலநிலை மாற-எங்கும் சென்றடையும் தம் உணவு தேட கூதலுக்கு தன்னைக் காக்க பாம்பு கொண்டுளது புற்று எனும் கூம்பு ஆல மரமாம் தமிழன் ஊரில்-இன்று அலைகின்றான் நிழல்தேடி பாரில். ** பசுஞ்சோலை வீடு வளவு காணி படலையில் சங்கடப் படலை பேணி தெருவாலே போவோர் களை தாகம் தீர்ப்பதிலே கொண்டிருந்தம் மோகம் வருவோரை உபசரிக்கும் பண்பு வைத்திருந்தான் தமிழன்தான் கொண்டு பரிதவிக்கும் இனக் கொடுமையினால் யாலே-இன்று பாரெங்கும் நிழல்தேடு றானே. ** பாலைவனம் ஆதி யாழ்ப் பாணம்-பாணன் பரிசு பெற்ற தமிழர் நல் ஸ்தானம் சோல் வனம் அவன் உழைப்பி னாலே-துலா தோண்டி அள்ளும் ஆழ நீரை தானே கோல எழில் பண்பு நிறை பூமி-எங்கும் கொண்ட தெங்கள் பள்ளி கோயில் சாமி ஆள வந்தான் சிங்களத்து ஆமி-மண்ணை ஆக்கிர மிக்கின்றார் பெளத்த காவி. ** ஆயுதத்தில் நம்பிக்கை தொடர்ந்து-இடையே அமைதி முயற்சி களையும் கடந்து சூழ்நிலையோ உலகமெங்கும் மாற நாமோ தொடர்ந்தும் அதே வழியில் போ ராட ஓரணிக்குள் பிளவுகளும் சேர -இலக்கில் ஒன்றி நின்ற போர் அணிகள் ஓய போர்நெறியை சிங்களமும் மீற புதைந்ததுவே போர் வீறும் ஆழ. ** வாள் வெட்டு,போதை வஸ்து திருட்டு-எங்கள் வளவுகளும் எம்மவரால் பறிப்பு ஆள் கடத்தல் கப்பம் கை லஞ்சம் அத்தனைக்கும் ஊரில் இல்லை பஞ்சம் ஆளும் தமிழ் கட்சிக்குள் உள் பூசல் ஆளுக்கால் பதவி வெறி சாடல் போதுமடா ஈழ ஆசை சாமி -காப்போம் புகலிடத்தில் அடையாளம் பேணி.”