உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

எதற்காக எதுவோ

எதற்காக எதுவோ

கவி 738 எதற்காக எதுவோ அட என்னடா இந்த பூலோக வாழ்வுள் இது உழைப்பதற்காக கொடுக்கப்பட்ட ஆயுள் இது பணத்தைக் கட்டாயப்படுத்தும் பசித்தவாழ்க்கை உலகம் சுழற்றிவிடும் பணம்செய்யும் வாழ்க்கை காலையில் தொடங்கிய ஓட்டம் மாலைமட்டும் ஆட்டம் ஒரு நாளின் பெரும் பகுதியே இதைத்தேடியே நீட்டம் அலைகிறார்கள் களைக்கிறார்கள் வீழ்கிறார்கள் வாழ்கிறார்கள் கடவுளுக்குக்கூட உண்டியல்காசில்தான் உணவே ஊட்டுகின்றார்கள் இதனால் மகிழ்ச்சியை வாங்கமுடியுமா ஆராய்ச்சிக்கு நேரமில்லை மரியாதை நிறையவே கிடைக்கின்றது சாமிசத்தியமாக உண்மை பாய்விரித்து படுத்தாலென்ன மெத்தையில் படுத்தாலென்ன பணத்திற்கும் உறக்கத்திற்கும் சம்பந்தமில்லை முன்னபின்ன பணப்பற்றாக்குறை தீமைகளை உருவாக்கிவிடும் அது பணப்பிரச்சினை பணத்தை நிறைக்கும் பேராசை உணர்வை பழுதாக்கிவிடும் அது மனப்பிரச்சினை இந்த எலும்புத்துண்டுக்காக நாயாக குரைத்து வாலாட்டும் கோலம் பணத்துக்காக வாழ்க்கையும் வாழ்க்கைக்காக பணமும் என்பதாய்நாளும் ஜெயம் 28-08-2024 https://youtu.be/WmIfv8iZCAk?si=O3UiNBniV9-v0Qkj