உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

எங்கே அந்த வாழ்க்கை

எங்கே அந்த வாழ்க்கை

கவி 729 எங்கே அந்த வாழ்க்கை எங்கேதான் போனது அந்த புன்சிரிப்பு இங்கேதான் நடக்கிறது உண்மையான தப்பு மகிழ்ச்சியை தரவில்லையா ஓடியொடியும் உழைப்பு அப்படியாயின் எதற்காகத்தானோ வீணான பிழைப்பு வாழ்க்கையை விட்டுவிட்டு ஓடிப்போனதென்ன கலகலப்பு மறக்கலாமோ ஒருதரந்தான் கிடைத்ததிந்த வாய்ப்பு குறைந்தளவு காலமே மண்ணுலகின் இருப்பு ஆயுளோ தேய்கின்றது எப்போதுதான் அனுபவிப்பு நேரமில்லையென்று சொல்லி வாழ்க்கையினை சித்தரிப்பு போதாது போதாதென்று ஆசையினால் அந்தரிப்பு கதைப்பதும் சிறுத்து மறந்தது சிரிப்பு கிடைத்த கணங்களிலெல்லாம் மறுக்கப்பட்டதே பூரிப்பு கடைசியில் எல்லாம் பார்க்கலாமென தவிர்ப்பு நினைத்ததந்த நேரம்வர ஆரோக்கியத்தில் இழப்பு சாய்ந்துகொள்ள தோள்தராத சொந்தங்களால் தவிப்பு தேடவேண்டியதை தேடாததால் தேடியதிந்த உத்தரிப்பு காலம் கடந்தபின்பு வாழ்க்கைக்கு அழைப்பு நரைதிரை விழுந்து கோலத்திலுமில்லை வனப்பு விட்டுப்போன நிலையில் உடலிலுள்ள சுறுசுறுப்பு எப்படித்தான் நிகழ்ந்து நிறைவேறிடும் விருப்பு ரெக்கையின்றி எட்டுத்திக்கும் அந்தக்காலம் பறப்பு முன்றுகாலில் இந்தக்கால வாழ்க்கையதன் நடப்பு வாழ்க்கையில் பாதிக்குமேல் இரசிக்காமல் கழிப்பு மீதியிலே சிக்கிக்கொண்டு திருதிருவென முழிப்பு ஜெயம் 12-06-2024