உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

உழைக்கும் உலகை வாழ்த்தும் தினம்

உழைக்கும் உலகை வாழ்த்தும் தினம்

கவி 722 உழைக்கும் உலகை வாழ்த்தும் தினம் உழைப்பே உருளும் உலகின் மூலதனம் உழைப்பை காணாது நகராது தினம் மனிதகுலத்தை உயர்த்திடும் உன்னத கரங்கள் பணிசெய்தே ஓய்வின்றி அடைவாரே சிகரங்கள் விலைமதிப்பற்ற வியர்வை துளிகளைப் பாருங்கள் களைத்தோரை சேர்ந்தே கொண்டாடுவோம் வாருங்கள் நாட்டின் அபிவிருத்திக்கு இவர்கள்தான் ஆணிவேர் கூட்டில் அடைபடாத பறவையினமாய் பறபார் ஆயுளுக்கும் தாம்செய்யும் தொழிலையே நேசிப்பார் தேயினும் தேகமது ஓயாமல் சுவாசிப்பார் செய்யும் வேலைக்கு இல்லையென்றாலும் முதலாளி மெய்யாகவே மெய்யை வருத்திடுவானிந்த தொழிலாளி எத்தனை எத்தனை துறைகளுந்தான் இங்கே அத்தனையிலும் அயராத உழைப்போர்கள் அங்கே வெற்றியோ தோல்வியோ முடிந்தவரை போராட்டம் வற்றாத உற்சாகத்தால் நாளுமிந்த தேரோட்டம் வியர்வையாளரை வாழ்த்திடவே வந்ததோர் நாள் உயர்ந்தவராம் உழைப்பவரை கொண்டாடிடும் திருநாள் உடல் உளம் சோராத ஊழியனே கடலளவை கரங்கொண்டு படைப்பவனே வாழியவே ஒதுக்கப்படவும் அடக்கப்படவும் அடிமையல்ல நீயின்னும் திருத்தப்படாத சட்டங்களும் திருத்தப்படுமது திண்ணம் கேள்விக்குறியாய் வளைந்து தொடரினும் காலங்கள் வாழ்வும் போடட்டுமே அழகான கோலங்கள் ஜெயம் 01-05-2024