உறவாகி உயிராகி…!!
உறவாகி உயிராகி…!!
வியாழன் கவி 2237!!
உறவாகி உயிராகி..!!
இருமன இணைவாகி
இரு உடல் ஒன்றாகி
உணர்வுகள் உயிர்ப்பாகும்
உன்னதம் திருமணம்..
கருத்துக்கள் சிறப்பாகி
கருத்தூன்றும் விதைப்பாகி
உறவுகள் பிறப்பாகும்
உன்னதம் திருமணம்..
கருவின் தோன்றல் விதி
பருவ ஆக்கு நெறி
துருவங்கள் சேரும் கதி
அதுவே திருமணமான கதி..
சகிப்பும் சலிப்பும்
சரிதமாகும் புரிதலாகும்
புவி வாழ் காலம் யாவும்
தொடரலாகும் தொகுப்புமாகும்..
சிவதர்சனி இராகவன்
6/11/2025
