உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

உருகுவது மெழுகுவர்த்தியா?..

உருகுவது மெழுகுவர்த்தியா?..

சிவதர்சனி இராகவன் வியாழன் கவி 2121 உருகுவது மெழுகுவர்த்தியா.. உருகுவதும் உணர்வினில் கரைவதும் நீ மட்டுமா கருகுவதும் களங்கம் சுமப்பதும் மனசு இல்லையா ஏங்குவதும் எச்சரிப்பதும் அனுபவம் தொல்லையா அடடா யாவுமே மானிட வாழ்வில் இல்லையா.. வளர்பிறையாகும் பின் தேய்பிறை போலும் நிலவு தளர்வதால் தயங்கியே பின் செல்வதே அன்பாம் எப்படி வரும் எப்போ யார் வடிவில் கிடைக்கும் அறியோமே புரியோமே.. ஏங்கித் தவிக்கும் உணர்வில் ஏழ்மை வசதி ஏதப்பா கைகள் நீட்டி அழைக்கையில் சரணாகதி தானப்பா முடிந்துவிடும் சட்டென நம் வாழ்வியல் தெரிந்திடப்பா முத்தாய் மகிழ்ந்தே நிதமும் அன்பில் மூழ்கிடப்பா… சிவதர்சனி இராகவன் 11/3/2025