உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

உயிரான உறவே...

உயிரான உறவே...

வசந்தா ஜெகதீசன் உயிரான உறவே... வெற்றி மிகு வாழ்வில் வீறு கொள்ளும் சிந்தை பற்றியே படர்கின்ற பாதையின் செதுக்கல் பாசமுடன் காட்டி நேசமுடன் நிமிர்த்தி வாழும் வழி சுட்டும் வரலாற்றுப் புதுமை தாய்மை என்னும் அன்பே தரணி முதல் உறவு தனக்கெனவே வாழத் தைரியத்தின் உறவு உயிரான உறவே உதிரத்தின் கலப்பு பேசும் மொழி ஆற்றல் பெருமை நிறை வாழ்வு வரமெனவே தந்த உயிரான உறவு தாங்கி நின்ற துயர்கள் தலை நிமிர்ந்த கணங்கள் நேசமுடன் எம்மை பாசமுடன் ஈன்ற உயிரான உறவே நேசமும் நிமிர்வாய் நிதம் வாழ்க நீவிர் நன்றி மிக்க நன்றி