உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

உயிரான உறவே-2153 ஜெயா நடேசன்

உயிரான உறவே-2153 ஜெயா நடேசன்

பத்து மாதங்கள் பத்திரமாய் சுமந்து குழந்தையின் முகத்தை பார்ப்பாள் பிரசவித்த வேதனையும் மறப்பாள் உதிரத்தை பாலாக்கி ஊட்டி மகிழ்வாள் மடியை தொட்டிலாக்கி அணைத்து காலை நீட்டி படுக்கையாக்கி பிள்ளளைகளை தாலாட்டி சீராட்டி ஆராரோ சொல்லி தூங்க வைப்பாள் எட்டி காலால் உதைக்கும்போது உதைக்கும் காலை தூக்கி முத்தமிடுவாள் என் எண்ணங்களில் ஊறியவள் அன்னையே என் சிந்தனைகளுக்கு சித்திரமாய் என் பாதைகளை அமைத்து தந்தவள் அம்மா என் உயிரான உயிரே உங்களை பிரிந்து காலங்கள் பல ஆணடுகள் சென்றாலும் அம்மாவின் உயிர் என்றும் ஆழமானது என் உள்ளமதில் என்றும் இருப்பீர்கள்