உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

உதிர்க்கின்ற இலைகளே

உதிர்க்கின்ற இலைகளே

கவி 745 உதிர்க்கின்ற இலைகளே மரத்தோடும் கிளையோடும் இணைந்தே வாழ்ந்தீர்கள் வரவாக்கி வசந்தத்தை இயற்கையுடன் மகிழ்ந்தீர்கள் கனிகள் ஒளித்துவிளையாடிய மறைவிடம் நீங்களல்லவா துணிவோடு இலைகளிற்கிடையில் பூத்தன பூக்களல்லவா பச்சயத்தை தயாரித்து பச்சையழகு எங்கும் உச்சிவெய்யிலடிக்கையிலே உயிரினங்கள் உன்னடியில் தங்கும் தூய்மையான காற்றினை சுவாசிக்க தந்துவிட்டு ஓய்வெடுக்கும் வேளையென வீழ்ந்தீரோ கிளையைவிட்டு மரங்களின் இழிசெயல் இலைகளை உதிர்ப்பது உறவாக்கி கைவிடுவது அஃறினையெனினும் கொடியது குப்பையெனும் பெயரில் பொன்னிலைகள் பாய்விரிப்பு தப்பைச்செய்துவிட்டு மரங்கள் மொட்டையாக பரிதவிப்பு இன்னும் சிலநாள் கிளையில் இருந்திருக்கலாம் கண்ணுக்கு பசுமையூட்டி பின்னர் விழுந்திருக்கலாம் பேரழகின் தோற்றமாக இலைகளது மாட்சி பேரழிவின் மாற்றமாக இலையுதிர்வின் காட்சி ஜெயம் 17-10-2024