உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

உணர்வு 90

உணர்வு 90

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 11-11-2025 உலக மொழிகளுக்குள் தாயவளே முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும் எம் மொழியே! வண்ணப் பாட்டெடுத்தேன் தாயவளே வாஞ்சையோடு பல கதை தொடுத்தேன் அன்னை மொழியென கவி கிறுக்கி உணர்வு பொங்க அகம் குளிர்கின்றேன் கம்பனின் கருணைக் கவியும் பாரதியின் கனல் வீரமும் வணக்கம் சொல்லில் மரியாதையும் திருக்குறளின் நுட்பமும், அழிவின் விளிம்பிலும் அசையாது எழுந்து நிற்கும் தீச்சுடரே உன் புகழ் பாடி, உன் வழி நடந்து, உன் பெருமையுடன் நாங்கள் நிலைக்க எத்திசை சென்றாலும் அத்திசை தமிழ் வளர்ப்போம் எதிர்கால சந்ததிக்கு தமிழின் விழிப்பின் உணர்வு அளிப்போம்.