உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

உடன்பிறப்புக்கள்

உடன்பிறப்புக்கள்

ரஜனி அன்ரன் (B.A) “ உடன்பிறப்புக்கள் “ 10.04.2025 ஒருதாயின் உதரத்தில் உதித்த உதிரத்தின் உறவுகள் உடன்பிறப்புக்கள் உறவைக் கொண்டாடி மகிழ உறவினைப் பலப்படுத்தவென உருவானதே ஏப்ரல்பத்து உடன்பிறப்புக்கள் தினமாக ! அக்கா அண்ணா தங்கையென அறுவராகி ஒருகூட்டுப் பறவைகளாய் சிறகடித்து ஒன்றாகக்கூடி மகிழ்ந்தகாலம் கிளைகள் தாங்கிய வேராக பாசநிழலில் வாழ்ந்தகாலம் பகிர்ந்து உண்டகாலம் பசுமையாக இனிக்கிறதே இன்றும் ! அப்பப்போ செல்லச்சண்டைகள் சிணுங்கல்கள் சண்டையிலும் பாசம் முகிழ்க்கும் சிரிப்பிலும் சிங்காரமிருக்கும் புதையலாய் நினைவுகளும் பூக்கும் பூக்களாய் பாசம்விரியும் கூடுவிட்டு கூடுகலைந்து நாடுவிட்டு நாடுவந்து வாழ்ந்தாலும் தொடர்கிறது பாசவலை உடன்பிறப்புக்கள் எம்முயிரானவர் உன்னததினத்தை உரமாக்குவோம் ! https://www.youtube.com/watch?v=aXFD_-gLtnc