உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" இலக்கியக்கலாநிதி பண்டிதமணி ஐயா "

" இலக்கியக்கலாநிதி பண்டிதமணி ஐயா "

“ இலக்கியக்கலாநிதி பண்டிதமணி ஐயா “கவி...ரஜனி அன்ரன் (B.A) 13.03.2025 சிந்தனைப்பட்டறை செம்மொழிக்காவலர் நாவலர் மரபில்வந்த ஞானக்களஞ்சியர் மட்டுவில் மண்ணில் உதித்தமகான் இலக்கியவழி இருநாடகமென தந்த உயர்தர பாடத்திட்டத்தின் ஆசான் ஆசான்களுக்கெல்லாம் ஆசான் பேராசான் ! ஆசான் ஆக்கிய நூல்களெல்லாம் அருந்தமிழுக்கு விருந்தாகி எழுத்திலே புதுமை நடையிலே காத்திரமாய் சொல்லுக்குப் பொருளுரைப்பார் கச்சிதமாய் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார் தமிழுக்காய் ! அள்ளஅள்ளக் குறையாத அறிவுச்சுரங்கம் தெள்ளுதமிழ் நீரோடை செந்தமிழின் பாவலன் அரைநூற்றாண்டுகள் தமிழோடு பயணித்து பங்குனித்திங்கள் பதின்மூன்றிலே மறைந்தாரே பண்டிதமணி ஐயாவிற்கு யாழ்வளாகமும் பண்போடு கலாநிதிப் பட்டத்தினையும் வழங்கி பண்பாடு காத்து நின்றதே ! https://www.youtube.com/watch?v=qolq6-mfPds