உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இறைத்திடும் பணத்தால் விழித்திடுமா உலகு

இறைத்திடும் பணத்தால் விழித்திடுமா உலகு

கவிதை 816 இறைத்திடும் பணத்தால் விழித்திடுமா உலகு பணமும் பொன்னும் பெருக்கம் மனதில் இன்னும் சுருக்கம் மெய்யாம் நேயம் ஓடிடும் பொய்யாய் தெரியா முகமூடிகள் மாடிமனை உயர்ச்சி மனங்களில் மனிதம் இடப்பெயர்ச்சி பணத்தால் பொருட்களை வாங்கலாம் பணத்தை உண்டு பசியாற முடியுமா பதவியும் பெறலாம் அதிகாரம் கொள்ளலாம் பாசத்தை வாங்கலாமா பண்பை தேக்கலாமா கண்ணீரை துடைக்க கரங்களே வேண்டும் கருணையை பகிர்ந்ந்திட மனங்களே வேண்டும் இறைத்திடும் பணத்தால் விழிக்காது உலகு இணைந்திடும் இதயங்களால் விழிந்திடும் உலகு ஜெயம் 03-09-2026