உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு..

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு..

வசந்தா ஜெகதீசன் இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு.. வீணாண செலவுகள் விதவிதமாய் விரையமாய் கரையுது தினம்தினமாய் ஆடம்பர வாழ்வில் ஆசைகள் கூடி அவரவர் தகுதியை விழாக்களில் காட்டி சமுகவலைத்தள முகத்தில் மூழ்கி அள்ளியே இறைக்கிறார் பணத்தினை வாரி.. ஊருக்குப் பணத்தை உழைத்தே அனுப்பி உருகுலையும் சமூகத்தை கட்டியே எழுப்பி சோம்பேறி வாழ்வை சொர்க்கமாய் நாடிட அள்ளியே இறைக்கிறார் பணத்தினை வாரி இல்லாத விழாக்களை எமதாய் ஆக்கி இயல்புக்கு மிஞ்சியே செலவினை கூட்டி செல்வாக்கு காட்டிட செய்கிறார் பலதை எதற்கென வினாக்கள் இல்லாத செலவு இயல்புக்கு மிஞ்சிய ஆடம்பர அதிர்வு இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு! நன்றி