உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இரா. விஜயகௌரி

இரா. விஜயகௌரி

விடைதரவா செல்வமே…….. கொதித்துப் பிளந்து கோபக்கடலில். வெடித்துச் சிதறி வேகச் சரிவினில். நொருங்கி சரிந்த சுவர்களின். நடுவே அவள் பிழந்த பூமியின் இடுக்குகளிடையே மென்தளிர் மகளாள் கசங்கிக் கிடக்கிறாள் துருக்கியின் செல்வம் துவண்டது துடிப்பை. அடக்கி நின்றனள் அவள் கரங்களின் பிடியை விடாது விட்டுப் பிரிந்திட முடியா. தந்தை அனலின் நடுவில் அமர்ந்த சோகம் அணைத்திட முடியா பாசத் தவிப்பு இன்னமும் நான் மட்டுமேன் உயிர்க்கூடு சுமக்கிறேன் கேள்விகள் துளைக்க 2023 மாசித்திங்கள் 6இன் பதிவெழுதும் சுவடாய் இவர்கள் கனக்கிறது இதயம் கசிகிறது. விழிகள்