உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இராசையா கௌரிபாலா

இராசையா கௌரிபாலா

தைமகளை வாழ்த்துவோம் ————————————- தைத்திருநாள் வந்ததே தைமகள் முற்றத்தில் எத்திக்கும் கொண்டாட்டம் ஏர்முனையில்-புத்துணர்ச்சி தித்திப்பு பொங்கியே தேனாய் இனித்திடும் முத்தமிழ்ப் பண்பாட்டின் மூச்சு. திருநாளாம் இன்று தரணியிலே பொன்னாள் திருமலர்ந்த இன்பத் தினமாம்-தருவாய் விரும்பி உழவர் விதைத்தே அறுத்த பெருவாரி நெல்மணி பெற்று. போற்றிடும் நாளே பொழுதினில் சூரியனை சேற்றினில் கால்வைத்த சேவையர்- சோற்றினைப் பேற்றுடன் தந்தாரே போரினை வைத்துமே ஆற்றுகை காண்பர் அறம். இராசையா கௌரிபாலா.