உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

“இயற்கை வரமே இதுவும் கொடையே”

“இயற்கை வரமே இதுவும் கொடையே”

வியாழன் கவி -2225 “இயற்கை வரமே இதுவும் கொடையே” வானம் பூமி காற்று நீரு வண்ணம் எண்ணம் பாரு தருவும் செடியிம் கொடியும் தருதல் நன்றாம் பயனே வரமாய் இறைவன் தந்தான் வழிகள் உண்டாம் வாழ விழிகள் போலக் காக்க விடியல் நமக்காய் ஆகும்…!! காயும் கனியும் நல்ல கண்ணைக் கவரும் பூவும் சோலை தென்றல் ஆறு வேறும் தேவை ஏதோ ஈங்கு பறவை மிருகம் மாந்தர் இயற்கை விரும்பும் நாளும் புல்லும் செடியும் கொடியும் பூவுலகு அழகின் பேறு பாரும்..!! தாந்தோன்றி தானே இயற்கை தங்கம் போலும் பயன் தானே!! சிவதர்சனி இராகவன் 16/10/2025