உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இயற்கை வரமே இதுவும் கொடையே...

இயற்கை வரமே இதுவும் கொடையே...

வசந்தா ஜெகதீசன் பஞ்ச பூதங்கள் படைப்பில் உலகம் பரிணம வளர்ச்சியில் பாரே இமயம் இயற்கை வளமே இதனின் உரிமம் இல்லாது போயின் வாழ்வே கடினம் வற்றாச் சுரங்கமாய் வனப்புகள் நிறையும் வாழ்வியல் ஆழியே இதற்குள் இணையும் உலகியல் ஜாலங்கள் கோலமாய் மிளிரும் இயற்கை வனப்பே இங்கித நிறைக்கும் கொடையெனப் பலதை வாரியே தந்து குவலய வாழ்வு குன்றிலே விளக்காய் வாரியே நிறைக்கும் வண்ணச் சுவடு வரமெனக் கிடைத்த இயற்கை இனிது வாய்ப்புகள் நிறைக்கும் புவியே அழகு தனித்துவம் எமக்கு தருகின்ற இயல்பு தரணி வாழ்வின் வற்றாத ஊற்று. நன்றி மிக்க நன்றி