உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இன்னுமென்ன வேண்டும் இறைவா

இன்னுமென்ன வேண்டும் இறைவா

ராணி சம்பந்தர் காலநிலைக்கோ கொலைவெறி கோலம் மாறி ஞாலம் போடுதே குளிர் கூதலோ வெள்ளணவே ஆயத்தமாகிச் சாலம் கூட்டுதே பூலோகம் படும்பாடு பெரும்பாடே அல்லோலப்படும் அலங்ககோலம் சில்லெடுப்பான சீரழிவுகள் மேலிட பல்லிழிக்கும் ஆயுதங்கள் பாழிடுதே அநியாயப் போர் விமானக் குண்டின் வீச்சில் விழுந்த புவியின் பிளவுகளில் பூமாதேவி கொதித்தெழும்பும் நியாயம் சாதிக்கும் ஆவேஷ நெருப்பும் மூளுதே மழை, வெள்ளம், பேரழிவுகள் ஏலம் போட பனி ,குளிர் ,சூறாவளி அழிவுகள் பாலமிட இன்னுமின்னும் படரத் தொடரும் துயரில் என்னென்ன வேண்டும் எம் இறைவா .