உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இதெல்லாம் இப்போ எங்கே

இதெல்லாம் இப்போ எங்கே

கவி 753 இதெல்லாம் இப்போ எங்கே மனித உரிமையென்று வாய்கிழியச் சத்தம் தணிந்ததா இதுவரையில் மானிடர்க்குள் யுத்தம் புனிதராக எவருமில்லை உள்ளமில்லை சுத்தம் தனிமனித உரிமைபெற போராட்டமே நித்தம் சாதியென்றும் மதமென்றும் ஆறாமறிவு பார்க்கும் பாதியிலே வந்தவற்றை பரம்பரைக்குச் சேர்க்கும் விலங்குகள் பறவைகள் வாழ்க்கையதோ அருமை விலக்கிவைத்து வாழ்வதிலே மனிதருக்குப் பெருமை மோலோர் கீழோர் என்கின்ற பாகுபாடு ஆள் யாரென ஆராய்சியில் ஈடுபாடு கேட்டால் நாங்கள் ஓரினமே பிரிவேது தீட்டாய் எண்ணிடுவார் தன்மட்டில் வரும்போது வீசுகின்ற காற்றும் பேதம் பார்ப்பதில்லை வாசத்தை தருகின்ற மலர்களுக்கும் பேதமில்லை வெளிச்சந்தரும் ஆதவன் உயர்ந்தவர்க்காய் உதிப்பதில்லை இழிவுநிலை எண்ணமதோ மாந்தர்க்கு மாறவில்லை மனிதம்பற்றி சிந்திக்க மனிதன் மறந்துவிட்டான் குனிந்தவனை குட்டிக்குட்டி பெருமைகொள்ள பழகிவிட்டான் தீண்டாமை சட்டப்பிரிவு பதினேளால் பயனில்லை ஆண்டவரின் கோவிலுக்குள் செல்வதற்கும் தடையெல்லை ஜெயம் 11-12-2024