உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இதெல்லாம் இப்போ எங்கே ?

இதெல்லாம் இப்போ எங்கே ?

“ இதெல்லாம் இப்போ எங்கே ? கவி....ரஜனி அன்ரன் (B.A) 12.12.2024 உலகம் முழுவதும் உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்குது எங்கே எங்கே மனித உரிமையென்று எங்கும் தேடி அலையுது மனித உரிமை மீறல்களே மன்னுலகை ஆளுது அன்பு சமத்துவம் நீதியெல்லாம் அறவே செத்துப் போச்சுது ! மூன்றாம் உலக யுத்தமொன்று முழுமூச்சாய் தொடருது மொத்த உலகும் கூடி நின்று வேடிக்கை தான் பார்க்குது கொலையும் களவும் பொய்யும் புரட்டும் மலிந்து தான் போச்சுது நீதிதேவதையோ மண்டியிட்டுக் கிடக்குது அநீதிகள் தான் தலைவிரித்து ஆடுது ! அன்பில்லை பாசமில்லை பந்தமில்லை இப்போ அத்தனையும் வேசம் தான் இப்போ மதமென்றும் பேதமென்றும் மானிடமே அலையுது மனிதஉரிமை என்ற பெயரில் - இப்போ புதிய யுகமொன்றைத் தேடுது ! https://www.youtube.com/watch?v=Zb52vlwlomo