உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இதுதான் எது அதுதான் இது

இதுதான் எது அதுதான் இது

கவிதை 763 இதுதான் எது அதுதான் இது அறிவிக்காமலே வந்துவிடும் உண்ணவென விருந்து தீரா நோய்களின் கவலைகளை தீர்த்துவைக்கும் மருந்து இறைவனாயில்லை இருந்தாலும் ஏனோ பயமுண்டு நெருங்கவிடாது இதை பார்த்தலே மகிழ்வுண்டு வீடுவீடாக தரிசிப்பது போகாத வீடுகளேயில்லை தன்னை நினைக்கவைத்து நிம்மதியை குலைக்குமிது உருவம் இதற்கில்லை உருவங்களைப் பிடிக்காது இதன் செயலாலே கடவுளுக்கும் இழுக்குண்டு யாருக்கும் இதனாலே பலனெதுவும் கிடையாது பணங்கொடுத்தால் போகுமென்றால் அதுவுங்கூட முடியாது இயற்கையானதா செயற்கையானதா இன்றுவரை புரியவில்லை இரசனையில்லாதது மட்டுமல்ல உறவையறியாது என்று அதிகமானோர் வருந்துகின்றார் அனுபவத்தைக் கொண்டு இதை கடந்துவிட்டுப் போகவே திட்டம் இருந்தாலும் வலிந்துமே தானாகவே முட்டும் வேட்டையாடி சந்தோசிக்கும் வேடனின் காட்டம் மாற்றமொன்றை காட்டவரும் விழியறியா தோற்றம் உண்மையில் ஒவ்வொருவருக்கும் அருக்காமையிலேயே உண்டு ஒருவருக்காக ஒருவர் செய்யமுடியாத ஒன்று ஓடுகின்றோம் முன்னாலே சேர்ந்தே ஓடுகின்றது வாழ்க்கை அற்புதமானதாகும் இதனை தவிர்த்தால் பாயை சுருட்டும் செய்த பாவப்பொருளோ அதிஷ்டம் இல்லா மானிடர் நிகழ்வோ புகழென்ன பெயரென்ன தொடர்வதுவும் இதனாலே எங்குமே எதிர்பார்க்க வைத்துவிடும் புதிர்தானே ஜெயம் 27-02-2025