உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இதனாலே எல்லாம் இதனாலே

இதனாலே எல்லாம் இதனாலே

கவி 718 இதனாலே எல்லாம் இதனாலே கொண்ட பண்பை இழப்பதும் இதனாலே கொண்ட அன்பை மறப்பதும் இதனாலே பாசம் பசையாய் ஒட்டுவதும் இதனாலே உறவுகள் உருகி கரைந்துவிடும் இதனாலே இதுவன்றி ஓரணுவும் அசைந்துதான் விடுமோ இதற்காக பம்பரமாய் சுற்றாதவன் எவனோ இது உண்ணமுடியாது இதுவின்றி உண்ணவே முடியாது கட்டுக்குள்ளும் இருக்கும் கட்டுக்கடங்காதும் இருக்கும் சங்கடத்தை உருவாக்கி சஞ்சலத்தை நிறைக்கும் சமத்துவத்தை உற்பத்தியாக்கி ஏற்றத்தாழ்வையும் குறைக்கும் கட்டிலுக்கு அடியில் பதுங்கியே கிடக்கும் பெட்டிகளுக்குள்ளே கறுப்பாக பிணமாகவும் கிடக்கும் இது உயிர்வாழ மிகமிக அவசியம் இதுவரைக்கும் செய்துகொண்டிருக்கின்றது உலகில் அதிசயம் சுகபோக வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்றென்று உல்லாசப்பட்சிகள் உவகைபொங்க உச்சரிப்பதுமுண்டு ஆயுளில் முக்கால்வாசி இதற்காகவே தொலைந்தது என்னாயினும் வாழ்க்கையும் இதற்காகவே அலைந்தது எங்கும் எப்போதும் எவருக்கும் தேவையானது தங்குதடையின்றி வேண்டும் இதனது சேவையானது ஜெயம் 03-04-2024 https://youtu.be/Vn_IUjCVT4E?si=m0MIRljBrDhPB94T