உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஆரோக்கிய வலுவும் ஆசானங்களும்...

ஆரோக்கிய வலுவும் ஆசானங்களும்...

வசந்தா ஜெகதீசன் ஆதிக்கலையாய் அங்கீகாரம் ஆரோக்கிய வாழ்வின் அட்சயம் வழிமுறை நின்றுவலுவுடன் கற்றால் வருமுன் நோயை காத்திடலாகும் திடமாய் மனதை தேக்கி உயர்த்தும் உடல்நிலை உபாதையை ஒரம்கட்டும் ஆசானப்பயிற்சியும் சீரான சுவாசமும் செதுக்கிடும் எம்மை அங்கம் பலதை அசைத்து நிமிர்த்தி சீரான ஓட்டத்தை உடலில் நிறுத்தி மனத்திடம் கொடுக்கும் மாத்திரையற்று யாத்திரை தொடர வலுத்தரும் யோகாசனமே ஆற்றல் பெரிது ஆத்மார்த்த இணைவு எம்மை நாமே புடமிடும் புதுமை மனமொன்றி செய்தல் மகிழ்வே விழிப்பு ஆரோக்கிய வாழ்வே அளப்பெரும் சொத்து தர்ஜினி ஆற்றல் தடமதுபதித்து ஆண்டுகள் பலது கற்றே மகிழ்வோம் கைப்பொருள் உணர்வோம். நன்றி மிக்க நன்றி