உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" ஆணினமே வாழி "

" ஆணினமே வாழி "

ரஜனி அன்ரன் (B.A) " ஆணினமே வாழி " 20.11.2025 தந்தையாய் தலைவனாய் தனயனாய் தன்னலமின்றியே தலைமுறை காத்து மலைபோல் பாரத்தைத் தலைமேல்சுமந்து குடும்பத்தின் கோபுரமாய் குன்றின்விளக்காய் உழைத்திடும் ஆணினமே அனைத்துலகும் போற்றிடுதே கார்த்திகைத் திங்கள் பத்தொன்பதாம் நாளை அனைத்துலக ஆண்கள்தினமாக ! நிழலாய்நின்று துணையாகி நிஜமாய் வாழ்வில் இணையாகி புயலாய் வெளியில் தெரிந்தாலும் மழைத்துளியாய் நனையும் உம்இதயம் ஆயிரம்கவலைகள் இருந்தாலும் அர்ப்பணிப்பில் இசையாகுமே உம்இதயம் ! நம்பிக்கை முனைப்பில் வாழ்வினை நகர்த்தி குடும்பத்தின் தூணாகி குதூகலத்தின் அரணாகி சுமைகளைச் சுகமாகசுமந்திடும் ஆணினமே உங்களை நீங்களே பாராட்டும்நாள் உணர்வோடு நின்று பார்க்கும்நாள் ஆணினமே வாழ்த்துக்கள் உமக்கு ! https://www.youtube.com/watch?v=1isU4tlrSDA