உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அவரா இவரா எவர்தான் கடவுள்

அவரா இவரா எவர்தான் கடவுள்

கவி 716 அவரா இவரா எவர் கடவுள் இருக்கிறாரா இல்லையா இருந்தால் ஒருவரா பலரா கடவுளை படைத்தவர் யார் அண்டத்தை ஆட்சிசெய்யும் அபூர்வ சக்தி அகிலத்தை ஆட்டிப் படைப்பவர் அகக்கண்ணாலேயே உணரலாம் மறைந்தே இருக்கின்றார் ஆதியும் அந்தமும் அவராக நாதியற்றவருக்கு அவரே துணையாக நல்லது நடந்தால் அவரது கருணை கெட்டது நிகழ்ந்தால் அது தலைவிதி இல்லாமலும் இருக்கின்றார் இருந்தும் இல்லாமலிருக்கின்றார் அனைத்தும் அவர் செயலே அவரின்றி ஓரணுவும் அசையாது சுணாமியால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பலியானார் கொரோனாவால் ஆயிரக்கணக்கில் மக்கள் மடிந்தார்கள் கடவுள் நல்லவரா தீயவரா கடவுள் நல்லவர் சாத்தான்தான் கெட்டது தெய்வம், திருக்கூத்துக்கள் செய்யும் கொடுக்கும்போது கூரையை பிய்த்துக்கொண்டே கொடுப்பார் எடுக்கும்போது சொல்லாமல்கொள்ளாமல் எடுப்பார் தன் இரும்புக் கரத்தால் அடிப்பார் விரும்பும்போதே தருவார் நாம் ஒன்று நினைக்க அவரொன்று நினைப்பார் மர்மமான வழிகளிலேயே செயற்படுவார் அவர் காட்டுவார் ஊட்டிவிடமாட்டார் நிலையில்லா தன்மைக்கும் நிலையான தன்மைக்கும் நடுவில் வாழ்க்கையை ஊசலாடவிட்டவரே அவர்தான் மதம் பிடித்தவர்க்கு மதம்தான் கடவுள் மனம் கொண்டோர்க்கு மனிதம் தான் கடவுள் அள்ளிக்கொடுக்கும் இயற்கை உயிர்காக்கும் கடவுள் பாசம் பொழியும் பெற்றோர் உருவமுள்ள கடவுள் உள்ளம் மட்டும் கோவிலானால் நீ கடவுள் நான் கடவுள் நாம் கடவுள் உங்கள் பக்கத்திலேயே கடவுள் இருக்க கடவுளை எங்கே தேடுகிறாய்? ஜெயம் 21-03-2024 https://youtu.be/2YQcY-RmsJI?si=j5fHQkGUVBKzuUPw