உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராம கவிதாசன் .

அபிராம கவிதாசன் .

கவி இலக்கம் -162. 20.01.2022 கவித் தலைப்பு ! “ கொண்டாட்டக் கோலங்கள் “ கொண்டாட்ட கோலங்கள் கொரோனாவை மறந்தன வண்டாட்டம் பறந்தன வண்ண வண்ண நிகழ்வுகள் ! புத்தாண்டு கொண்டாட்டம் புதுபுது வண்ணத்தில் மத்தாப்பு புன்னகை மல்லிகையாய் மலர்ந்தன ! இல்லத்தில் கொண்டாட்டம் இனித்தன உள்ளத்தில் செல்லக் குறும்புடன் சென்றன கொண்டாட்டம்! வண்ணவண்ண கோலங்களாய் வாழ்க்கை மலர்ந்திட திண்ணமாய் போராட்டம் தித்திப்பாய் மலரட்டும் ! திண்டாட்ட தேரோட்டம் திசையறியா பறந்தன மண்டாடும் உள்ளங்கள் மனத்திடம் கொண்டன ! இயற்கையை கொண்டாடும் இலைதளை காய்களுடன் செயற்கை நட்புறவால் சங்கமித்தே மகிழ்ந்தன ! இலக்கிய படைப்புடன் இதயங்கள் பேசின வலக்கரம் இடக்கரம் வில்லம்பாய் இணைந்தன ! இளமை முதலாய் இணையாய் முதுமையும் களத்தில் இறங்கி கனிந்து மகிழ்ந்தன ! பண்டிகை கொண்டாட்டம் பற்பல் படைப்புடன் வண்டிமாடு மஞ்சுவிரட்டி வகைவகையாய் கொண்டாட்டம்! வண்ண வண்ணகோலத்தில் வரைந்த எண்ணங்கள் கண்ணிரண்டும் பறித்தது களிப்புடன் கொண்டாட்டம்! நன்றி🙏