உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்

அபிராமி கவிதாசன்

விருப்பு தலைப்பு ! 31.03.2022 நேரிசை கலிவெண்பா “ பெண்ணின் பெருமை “ பிறப்பினை ஈன்றிடும் பெண்ணின் பெருமை சிறப்புடை மானிடத்தின் சீர்மை - அறமாம் திறமுடை சக்தியால் திண்ணம் நிறைய இறக்கும் சுமையின் இறை குலத்தில் விளக்காய் குலமகளாய் நிற்பாள் நலத்தில் அக்கறை நல்கி-நிலமாய் இலட்சம் படைப்பாள் இலட்சியம் வெல்வாள் உலகினை ஆழ்வாள் உழைத்து எறும்பின் உழைப்பினை எள்ளி நகைப்பாள் உறுதியின் உண்மையின் உள்ள- அறும்பு சிறுதுளி வெள்ளமாம் சிக்கனத்தின் செம்மல் இறுதிவரை காத்திடுவாள் ஈந்து பின்னுறங்கி முன்னெழும் பெண்மை முழுமதி புன்னகை சிந்திடும் பூவினத் - தென்றலாம் அன்றலர் மல்லிகை அன்பியப் பெண்மகள் மன்றினில் நிற்பாள் மலர்ந்து மகளிரை வாழ்த்துகின்றேன் மாண்பினை போற்றி புகழுரை சூட்டி புனித அகத்தால்- சிகரத்தை எட்டிடும் சித்திர பெண்மை பகலவன் தீபமாம் பாருக்கு நன்றி 🙏