உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்

அபிராமி கவிதாசன்

சிறுமை கண்டு பொங்குவாய்! ............... பாலியல் வல்லுறுவுக் கெதிராகப் பொங்கு வாய் - தமிழ்ப் பண்பாட்டைச் சீரழிக்கும் கொடுமைக்கு எதிராகப் பொங்குவாய்! மதுபோதை கஞ்சா வைத் தடை செய்யப் பொங்கு வாய் - நம் மாவீரர்கள் கனவை நனவாக்கப் பொங்குவாய்! அன்னைத் தமிழ் காக்க அயராது பொங்குவாய் - நம் மக்களைக் கொன்றவனை மறு படி கொல்லப் பொங்குவாய்! நன்செய் நிலங்களை நஞ்சாக்கும் அரசுக்கு எதிராகப் பொங்குவாய் - இயற்கை உரமிட்டு பயிர் செய்யும் பழந்தமிழர் முறைகாணப் பொங்குவாய்! புத்தாண்டுத் தைத்திங்கள் பொங்கலாய்ப் பொங்குவாய் - அனைத்துக் கொடுமைக்கு எதிராகப் பொங்குவாய்! - ஆசிரியை; - அபிராமி கவிதாசன்