உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-280, தலைப்பு! *வெற்றிப் பயணம்* .......................... வாழ்க்கை முழுவதும் பயணம்தான் - நல் வழிதவறினால் துயரம்தான்! புதிய தலைமை வந்தாச்சு - எல்லாம் பொதுவாய் ஆக வழியாச்சு! எங்கட பயணம் இனிதாகும் - இனி என்றே மனமும் மகிழ்வாகும்! எங்கள் நிலத்தில் இராணுவமும் - அட இனிமேல் திரும்பும் நிலையாகும்! புதிய சிங்களக் குடியேற்றம் - நாளை வெளியேறினால் பெருமாற்றம்! தப்பிப் பிழைத்த எம்மக்கள் - இன்றே நாடு திரும்ப முடிவாகும்! . சமநிலை உரிமை கிடைத்திடவும் - வேட்டுச் சத்த மின்றி வாழ்ந்திடவும்! பொறுத்தே இருந்து பார்த்திடுவோம் புதிய ஆட்சியை ஏற்றிடுவோம்! தேர்தல் அரசியல் பயணத்திலே - ஈழ தேசம் மலருமா கணத்தினிலே ? நல்லது நடக்க வாழ்த்திடுவோம்! - யாவரும் நலமாய் வாழவே உழைத்திடுவோம்! எங்கட பயணம் தொடரட்டும் - எங்கட சனங்களின் ரணங்கள் மறையட்டும்! மூவின மக்களுக்கு வாழ்வளிப்போம் - புதிய ஜனாதி பதிக்குத் தோள்கொடுப்போம்! -ஆசிரியை: அபிராமி கவிதாசன் 01.10.2024