அபிராமி கவிதாசன்
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-279. தலைப்பு!
"விடியுமா தேசம்"
.............
எங்கட தேர்தல்
முடிந்தது - இன
வாதம் மீண்டும்
நிமிர்ந்தது!
சங்கடம் தீருமா
நாளை? - அட
விடியுமா தேசம்
காலை ?
எந்த உரிமையும்
இல்லை - தமிழ்
பேசியதால் வந்தது
தொல்லை!
தலைவர் ஆண்டார்
நன்று - நாங்கள்
மகிழ்ந்தோம் வாழ்வில்
அன்று!
ஒளிவிடும் நாங்கள்
மெழுகு - ஈழ
மண்ணில் வாழ்ந்தோம்
அழகு!
உடைமை உரிமையைப்
பறித்தார் - எங்கள்
உறவை மண்ணிலே
புதைத்தார்!
விடியுமா மீண்டும்
தேசம் - இன
வெறியரால் எல்லாம்
நாசம்!
புத்தர் போர்வையில்
வேடம் - நமக்குக்
காட்டினார் காடையர்
பாடம்!
ஒற்றுமை வேண்டும்
நமக்கு - இதை
உணர்ந்தால் விடியும்
கிழக்கு!
தலைமுறை வாழ
நினைப்பாய் - தமிழ்க்
கல்வியை ஊட்டி
வளர்ப்பாய்!
இளமைத் துடிப்பில்
இருப்பாய் - தமிழ்
இனத்தை உயர்த்த
உழைப்பாய்!
ஐநா மன்றில்
கோரிக்கை - ஈழம்
அடைய உயர்த்துவோம்
கோடிக்கை!
தேசிய விடுதலை
தோற்குமா?- தமிழர்
திரண்டால் உலகம்
ஏற்குமா?
ஆசியாக் கண்டமே
அலறுமே - இயற்கை
நினைத்தால் ஈழம்
மலருமே!
நாளை விடியும்
தேசமே - தமிழர்
இணைந்தால்தாயின்
பாசமே!
தாய்மொழி தமிழே
இணைக்குமே - ஈழம்
உறுதியாய் ஓர்நாள்
பிறக்குமே!
. ஆசிரியர்..
அபிராமி கவிதாசன்
.24.09.2024
