உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-276. தலைப்பு! பருவம் ............ பருவத்தில் பயிர்செய் படித்திருப்போம் - நல்ல பருவத்தில் மணமுடிக்க மகிழ்ந்திருப்போம்! காலத்தின் பருவத்தைக் கணக்கெடுத்தார் - முன்னோர் காலத்தால் அழியாத சிலை வடித்தார்! பருவத்தின் குறிப்பறிந்து படையெடுத்தார் - வெற்றிப் படைநடத்திப் பார்போற்றும் புகழ்படைத்தார்! ஆறுகளின் குறுக்கே அணையமைத்தார் - பருவம் அடைந்திட்ட காலத்தில் விதைவிதைத்தார்! பருவத்தின் சிறப்பினையே அறியவேண்டும் - இளம் பருவத்தில் வரலாற்றைப் படிக்கவேண்டும்! பருவத்தில் காய்கனிகள் விளைக்கவேண்டும் - நாட்டில் பல்லுயிரும் வாழ்ந்திடவே உதவவேண்டும்! பருவமழை வெள்ளத்தைத் தடுக்கவேண்டும் - தண்ணீர் பஞ்சமில்லா நிலையினையே ஆக்கவேண்டும்! ஈழத்தை மீட்டிடவே துணியவேண்டும் - பருவம் இனம்காக்க நல்வாய்ப்பாய் மலரவேண்டும்! - அபிராமி கவிதாசன். - 20.08.2024