உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -253 தலைப்பு! பிள்ளைக் கனி அமுது ..... பிள்ளைக் கனியமுது - அதைப் பெறுதல் தனியினிது வெள்ளை மனத்தழகு - அதில் விளையும் உருபுதிது! பிஞ்சுக் கைஅசைவு - அட பச்சைக் கிளிச்சிறகு அஞ்சாப் புதுவரவு - பிள்ளை அடங்காப் பெருந்துணிவு! தவழுவும் கலைநிலவு - பிள்ளை தமிழ்போல் தேன்பிழிவு கவரும் விழிப்பதிவு - பிள்ளை கரும்பாய்ச் சுவைச்செறிவு! அரும்பின் இதழ்பொலிவு - பிள்ளை அறிவில் வளர்தெளிவு சுரும்பாய் அதுசுழலும் - அதைச் சுற்றி வரமகிழும்! பிள்ளைக் கனியமுது - அதை வெல்வ தினிஅரிது! துள்ளும் மொழிமழலை - அது தொலைக்கும் நம்கவலை! அபிராமி கவிதாசன் 13.02.2024