உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-247 சிரிப்பு .... வான்முகில்கள் மோதலிலே வெடிச்சிரிப்பு - இரு வல்லரசுகள் மோதலிலே -ஏவு கணைச் சிரிப்பு! தேன்இதழ்கள் மோதலிலே காதல் சிரிப்பு-அந்த இயற்கைமகள் பார்வையிலே அழகின் சிரிப்பு! கருங்குயில்கள்வாய் திறந்தால் இசைச்சிரிப்பு-மொட்டு மலர்விரிப்பில் தோன்றுவதோ பூஞ்சிரிப்பு! மழலையர் புன்னகையில் மலர்வதோ-அந்த மாயவனாம் எம்கடவுள் கண்ணனின் சிரிப்பு! என்மகன் கவிதனின் குரலோசையிலோ - திரு வள்ளுவரின் வாய்மொழியாம் தமிழமுதக்குறள் சிரிப்பு! சந்தேகப்பேர்வழிகள் உதட்டினிலே எப்பொழுதும்-தோன்றும்காண் அகந்தையெனும் ஆணவச் சிரிப்பு! தேசியத் தலைவரை நேசிப்பவர் முகத்தினிலே - மலரும் அன்பின் உருவான தாயின் சிரிப்பு! எங்கள் மக்கள் ஒருங்கிணைப்பில் விடியும் பார்-ஈழ தேசத்தின் விடுதலைச் சிரிப்பு! தேன்இதழ்கள் மோதலிலே காதல் சிரிப்பு-அந்த இயற்கைமகள் பார்வையிலே அழகின் சிரிப்பு! அபிராமி கவிதாசன் 02.01.2024