உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்.

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம்-164 10.03.2022 தலைப்பு! “ பெண்ணினமே” பாரதி கண்ட புதுமைப் பெண்ணே பாருக்குள் உன்புகழ் பெருமிதம் கண்ணே/ பட்டங்கள் பெற்று சட்டங்கள் செய்வாய் ஏட்டினை தொட்டு நாட்டினை ஆழ்வாய்/ ஆழ்வதும் உன்னாலே -பெண்ணே அழிவதும் உன்னாலே/ ஆதியும் அந்தமுமாய் மன்றின் அவதாரம் பெண்ணன்றோ/ தந்தைக்கு மகளானாய் பதிக்கு தாரமானாய் குழந்தைக்கு தாயானாய் குடும்பத்தின் குத்துவிளக்கானாய் / அச்ச மட நான பயிர்ப்பு அத்தனையும் உன்றன் அழகிய படைப்பு/ அன்பின் கணவருக்கும் அழகிய குழந்தைக்கும் அருகில் சுற்றத்திற்கும் அன்புஒளி நீயன்றோ / ஓயாத உழைப்பும் ஒருஉயிர் உன்னில்ஜனிப்பு நீயாக இன்றி வேறுயாரேலே முடியும்/ ஒருதீபக் கல்வியாலே ஒளிதீபம் தந்தவளே உடல்பொருள் ஆவியும் தானமாய் தந்தாயே/ உன்றனைப் போற்றி பேசிடவே பெண்ணே உலகினில் நான் பிறப்பெடுத்தேன்/ உன்றன் புகழ்பாடிடவே ஜென்மம்ஏழு போதாது என்றன் பெண்ணின மகளே பெருமிதமே / நன்றி.