உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்.

அபிராமி கவிதாசன்.

17.05.2022 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -175 தலைப்பு ! “தீயில்எரியும் எம்தீவு” எரிகிறதே என்தீவென்று ஏன்சிந்துகின்றீர் கண்ணீரை அரிதங்கு வாழ்வதென்ற அவலத்தை அறிந்தீரோ / பெற்றதாய் வயிறெல்லாம் பற்றியே எரிந்து வற்றாத நதியாகி வடிந்ததே விழிநீர் / ஓடியும் உயிர்தப்பி ஒழியவும் முடியாது வாடியே உயிர்விட்ட வயோதியர் சாபமோ / அம்மா என்றோடி அணைத்த பிள்ளைமுன் அய்யோ என்றலரும் அன்னையின் சபதமோ / பெண்குலத்தை இழிவாக்கி பெருந்துயரை உருவாக்கி கண்முன்னே சூரையாடிய கருணையற்ற பாவமோ / தீயில் எரியும் தீவின் கொடுமை புவியினில் வேறெங்கும் புலர்ந்திடல் ஆகாது / கரியாகி குவியும் கண்ணீர் உடல்கள் எரிகிறதே ஈழம் என்று தணியும் / நன்றி வணக்கம் பாவை அண்ணா 🙏