உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்.

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம் -161 கவித் தலைப்பு ! “இரத்தம் கொதிக்குதடா” கூட்டிற்குள் அடைப்பட்ட கூண்டு கிளியல்ல நாட்டிற்க்காய் உயிர்ஈந்த நற்றமிழ் உறவுகளே / நடைபிணமாய் வாழ்ந்தாலும் நட்புறவோ தாய்நாடே தடைகள் பலகண்ட தன்நிகரில்லா என்நாடே/ வீரமறத் தமிழன் விளைந்தமண் முத்துகளே சாரதி மனவலிமை சார்ந்த சொத்துக்களே/ வாழப்பிறந்த மனிதரல்ல வஞ்சக நெஞ்சறுத்து ஆழப்பிறந்த தமிழனடா ஆதித்தமிழ் மைந்தனடா/ மடிந்தே வீழ்ந்தாலும் மடிஎன்றன் தாய்மண்ணே படிந்த வடுக்கள் புதைந்த இதயங்கள்/ இறுதிமூச்சுக் காற்றின் இதயஅறை நான்கும் உறுதிகொள்ளும் சுவாசிக்க உள்நாட்டு தென்றலென/ எத்துணை இன்னல்கள் எதிர்க்கும்வ லிமையுண்டு இத்தரணி காலம்வரை ஈழத்தமிழ் உறவுண்டு / வார்த்திடும் தலைமுறை வரலாற்று சுவடுகள் வார்த்தைகள் உதிர்க்காது வந்தனம் சமர்ப்பணம்/ நன்றி வணக்கம்🙏