உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அன்பே இறைவன்

அன்பே இறைவன்

தினக்கவி 2017! அன்பே இறைவன்.. அன்பு வேண்டி அலையும் மனம் இன்பம் காண்பது இல்லை தினம் ஆன்மா லயிக்கும் கணமே நிதம் இல்லை என்றிடாது கொடு நித்தம் இறைக்கு நிகர் அன்பு தானே இருப்பதைப் பகிர்வது சிறப்பு தானே பேதமை காட்டாது விழி நீர் விலக்கி பெருமை கொள்வது மானிடமாமே ஆலய வழிபாடும் தேவை இல்லை அல்லும் பகலும் தொழ தேவை ஏது இல்லை என்றே வரும் போது இருப்பில் துளியை ஈதல் பெரிதே பசி போக்கி புன்னகை விரிக்க பக்குவம் கொண்ட மனம் உண்டே பண்பே மனிதம் இதுவாம் பாரும் பாரில் பெருமை உண்டே நாளும் சிவதர்சனி இராகவன் 29/8/2024