உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

“அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே”

“அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே”

கவி இல(132) 09/05/24 பத்து மாத பந்தம் -கருவறையில் காத்து வளர்த்த சொந்தம் தொப்புள் கொடியுறவு அறுந்திடுமோ என்றும் அன்பைச் சொரிந்தாய் வலி தாங்கி ஈன்றெடுத்தாய் பாலமுது ஊட்டிடவே- பக்குவமாய் பத்தியமும் காத்தாயே கண்ணுறக்கம் தொலைத்தாய் -நான் கண்ணுறங்க நீ தாலாட்டினாய் -என் வளர்ச்சியிலே இன்பம் கண்டாய் உயர்ச்சியிலே திண்ணம் கொண்டாய் பள்ளியில் விட்டுத் தள்ளி நின்றாய் - நான் துள்ளி வர அள்ளிக் கொண்டாய் தடுக்கி விழு முன்னே பதறி வந்து தூக்கிடுவாய் அம்மா உன் அன்புக்கு எல்லை தான் ஏது உண்டு எனக்கென்று எல்லாம் செய்தாய் உனக்கென்று நான் என்ன செய்தேன்.? யுகம் பல கடந்தாலும் -நான் உன் முகம் மறந்திலேன் அம்மா!!!! நன்றி வணக்கம்.