உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே

கவி 724 அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே உறவுகளுள் இவரே உன்னத உறவாம் வரமாக கிடைத்திட்ட உயரிய வரமாம் அள்ளி அள்ளி கொடுப்பாரே பாசத்தை எள்ளளவும் குறைத்திடார் சொரியும் நேசத்தை ஆயிரம்பேர் வாழ்க்கையில் வருவார்கள் போவார்கள் ஆயினும் இவரைப்போல் யார்தான் ஆவார்கள் பெத்தவள் பேறுபெற்றவள் அந்த படைத்தவரால் இத்தரையோ வணங்கிடும் இவளை படைத்தவளாய் உதைத்தே உருண்டு புரளுவான் சேய் அதையும் உவகையுடன் ஏற்றுக்கொள்ளுவாள் தாய் சுமையினை விரும்பியே தாங்கிடும் சுமைதாங்கி உமையொறுத்து வாழ்ந்தாயே வலிகளைத்தான் வாங்கி அன்னையை மிஞ்சிய தெய்வமும் இல்லையே உன்னத செயல்களும் பிறந்திடும் எல்லையே இறைவனோ தெரியாது இதுவரைக்கும் அரூபியாய் இறைவியாய் அன்னை தரிசிக்கும் சொரூபியாய் சுவர்க்கத்தின் வாழ்க்கை மண்ணுலகில் நகரும் இவரில்லா வாழ்க்கை பூமியில் நரகம் வாழ்த்திவிட தாயவளை நாளொன்று போதாது வாழ்ந்துகொண்ட அதிசயமே உன்னருளின்றி வாழ்வேது ஜெயம் 08-05-2024