உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அது எது

அது எது

கவி 731 எது அது எனக்குள்ளும் உண்டு உனக்குள்ளும் உண்டு யாரிடம் இல்லை இதன் செயற்பாடு எவரிடம் இல்லை இதனது வெளிப்பாடு என்னிடமில்லையென்றால் இல்லை அங்கு மெய்ப்பாடு விலங்குகளிடமொன்றும் பெரிதாக நானிதைப் பார்த்ததில்லை பட்சிகளிடமும் குறைந்தபட்சமேனும் நானிதை காணவில்லை மனிதனால் மட்டுமே செய்யக்கூடிய திருவிளையாடலது இயல்போ இயற்கையோ செயற்கையோ தெரியாதது அன்று நக்கீரப்புலவரிடம் சிவபெருமான் காட்டியது இன்றும் பெரும்பாலானோர் அட்டகாசமாய் காட்டுவது நல்லதுக்கு உட்பட்டால் பொல்லாமை நிகழாது கெட்டதற்கு பயன்படின் வாழ்க்கைக்கு மெய்யேது பற்பலர் இதன்பால் கைதேர்ந்தவர்களாகவே உள்ளார்கள் சிற்சிலர் அதையறியாது முட்டாள்கள் ஆனார்கள் மெய்யதா பொய்யதா அறிந்திட ஞானமுமில்லை செய்வார்கள் செயலில் இருப்பது தெரிவதுமில்லை நாளுக்குநாள் கூச்சமேயின்றி வாழ்க்கையில் அரங்கேறும் பயனடைந்தவர் இவராக பாதிக்கப்பட்டவர் வேறொருவராக கையும் மெய்யுமாக பிடிபட்டாலும் சகசமப்பா வாழ்க்கையிலை சக்கைபோடோபோடும் இவர்களுக்குத்தான் காலமப்பா ஜெயம் 27-06-2024