உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அட மனிதா

அட மனிதா

கவி 752 அட மனிதா உறவுகளைச் சுற்றி தத்துரூப நாடகம் எத்தனை முகமூடிகள் கைதேர்ந்த நடிப்பு பொருளாசை மண்ணாசை என ஆசைகள் கொண்டு தன்மனச் சொற்படி பொய்வழிதனில் நடப்பதாயின்று பொய்மொழிகள் பேசி நல்வழிகாட்டும் புதிய உத்தமர்கள் ஜம்புலன்களையும் கள்ளப்புலன்களாகவே பாவிக்கும் நவீன உன்னதர்கள் இந்த உலகச்சிறை கொத்தடிமைகள் கூட்டம் பொய்வேடமிட்டு இயல்பெனக்காட்டி வையகத்தில் ஆட்டம் உயிர்களைக்கொன்று உயிர்வாழும் மனிதகுல தன்மை பாவங்கள் நூறு நாளாந்தம் செய்தே மேன்மை நீர்க்குமிழி போன்றது உடலென அறிந்திடினும் உண்மை உண்மையின் நேர்மையின் தன்மையும் சிதைந்ததும் உண்மை பொல்லாதவைகளை செய்வதில் அப்படியொரு ஈடுபாடு அடங்காத உள்ளமதன் சொற்படி நிலைப்பாடு மண்ணுயிரை தன்னுயிராய் நினைக்காதே கொடுமைகள் ஆற்றலையும் அறிவையும் சீற்றத்தால் தொலைக்கின்ற மடமைகள் அன்பு என்பது ஆழமாக இல்லாது வற்றிவிட்டது பக்தி என்பது அறிவுபூர்வமாக இன்றி கேலிக்கூத்தானது ஏமாற்றுபவர்களும் ஏமாளிகளும் அதிகரித்த உலகம் சூதாட்ட வாழ்க்கையதன் சீர்குலைந்த பயணம். ஜெயம் 05-12-2024