உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அட என்னடா பொல்லாத வாழ்க்கை

அட என்னடா பொல்லாத வாழ்க்கை

விருப்புத்தலைப்பாக கவி 737 அட என்னடா பொல்லாத வாழ்க்கை எல்லாமே சிலகாலம் தான் இதை அறிந்தும் அறியாது நகர்கின்றது இந்தக் கோலந்தான் விதியும் வேடிக்கையாக நடப்பவற்றை மறைத்து ஆட்டிப்படைக்கின்றது போதாது இதுவென சில மனிதரால் துன்பமும் ஊட்டப்படுகின்றது தாங்கி நடாத்தும் இளமையும் கடைசியில் கைவிட்டுவிடும் கட்டியணைத்த உறவும் எட்டவே விட்டுப் போய்விடும் ஒட்டியிருக்கும் உடலுடன் என்ற உயிரும் சொல்லாமல் வெளியேறிவிடும் அட இதுவென்னடா பொல்லாத பூலோக வாழ்க்கை புன்னகையைத் துரத்தி வலிகளின் நுழைவு நிசம் என நினைத்தவைகள் நிழலென விழைவு கண்ணீர் துளிகளை துணையாக்கிய வெறுமை நிலை இதுதானே இந்த அறியாத வாழ்வின் இறுதிநிலை மனதுடன் தொடர்பில்லாத வெளிவேட உறவுநிலை மாறினாலும் மாறிமாறி ஏற்பட்டுக்கொள்ளும் காயங்கள் கலங்கும் மனமோ குரூரமானவர்க்குள் நிம்மதியைத்தேடி சரிசெய்ய முடியாதே நசுங்கிப்போன வாழ்க்கை சிலரை இங்கே பழகியும் சரியாகப் புரியமுடியவில்லை பலரின் மனதின் கொள்ளளவை எள்ளளவும் அறியமுடியவில்லை பாலெது கள்ளெது என்பதை அருந்திப்பார்க்காது தெரியாது உண்மையாக இருப்பவர்களிங்கே விரல்விட்டு எண்ணக்கூடிய கொஞ்சப்பேரே விரும்பிய வாழ்கை எப்போதுதான் வரும் தேடும்போது கிடைக்கவில்லை தேடாதபோதா கிடைக்கப்போகின்றது இன்பத்தை உணர்ந்ததைவிட வலிகளை உணர்த்திடவா இந்த வாழ்க்கை அழகாய் அமையாவிடினும் அமைந்ததை அழகாக்கிய நடிப்பான விந்தை வாழ்க்கையிது ஜெயம் 08-08-2024