உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" அடையாளத்தின் முகவரி "

" அடையாளத்தின் முகவரி "

ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026 குரலென்பது வெறும் ஒலியல்ல ஆன்மாவின் வெளிப்பாடு ஆளுமையின் அடையாளம் எண்ணங்களைச் சொல்லும் விசையாக சொற்களுக்கு உயிர்கொடுக்கும் ஆயுதமாவது குரல் உலகக்குரல் தினமான இன்று உயிர்கொடுக்கும் குரலைப் போற்றிடுவோம் ! விம்மலில் விசும்பலில் துயரம் சொல்லும் கோபத்தின் உச்சத்தில் எரிமலையாகும் கொஞ்சும் மொழியில் தேனாய் இனிக்கும் தாயின் தாலாட்டிலோ அமைதி கொள்ளும் அதுவே அடையாளத்தின் முகவரி குரல் ! உயிரின்ஓசை உதிரமின்றி ஓடும்நதியிது ஊமைச் சனத்தின் உரத்த சிந்தனையிது அநீதிகண்டு எழும்பும் பேரலை அக்கிரமம்கண்டு கொதிக்கும் எரிமலை சத்தமாகப் பேசுவது சிறப்பல்ல சத்தியக்குரல் ஒலிப்பதே உலகிற்குப் பொறுப்பு ! https://www.youtube.com/watch?v=Sxm5PcLdh5w